கல்லூரிக்கு போறதுக்கு முன்னாடி ஒரு எட்டு என் நண்பர்களை பாத்துட்டு வரலாம்னு டிரஸ் மாத்திக்கிட்டு என்னோட சைக்கிள்-ஐ எடுத்துக்கிட்டு கிளம்பினேன்.
என்னோட ஊரை பத்தி சொல்லணுமுன்னா, புதுக்கோட்டை பக்கத்துல புதுப்பட்டி ஒரு சின்ன அழகான கிராமம். அழகிய பாதி சிதைந்த சிவன் கோயில், இன்னும் பட்டா போடாத கண்மாய், பத்து பதினஞ்சு கான்கரிட் வீடு, 300 குடும்பங்கள், ஒரு சின்ன ஜெபக்கூடம், டாஸ்மாக், 3 டீக்கடை, 2 பலசரக்கு கடை, மரத்தடி பள்ளிக்கூடம் அதுக்கு 2 டீச்சர்.
இப்போ என்னை பத்தி , நான் குமார், பக்கத்துல உள்ள திருச்சி நேஷனல் காலேஜ்ல 2 வது வருஷம் Economics படிக்கிறேன்.
எங்க ஊரில என்னோட இன்னும் 3 பேரு அந்த காலேஜ் விடுதில தங்கி படிக்கிறோம். சனி ஞாயிறு லீவுக்கு ஊருக்கு வந்திருக்கேன், நாளைக்கு காலைல 5 மணி பஸ்ல கிளம்புனா காலேஜ் ஆரம்பிக்குற நேரத்துக்கு போய்டலாம்.
ஹ்ம்ம் என்ன சுகமான காத்து. இப்படி எதிர் காத்துல சைக்கிள்ல போற சுகத்துக்காக இங்கேயே இருந்திடனும் போல இருக்கும். என்ன செய்றது படிப்பு வேலை etc etc எல்லாம் நெனைச்சா....
மொதல்ல மணியை பாத்துட்டு, அவனையும் கூட்டிக்கிட்டு துரை, கதிர் 2 பேரயும் கோயில் அருகில் உள்ள மரத்தடியில் சந்திக்கனும்னு காலைலேயே பேசி இருந்ததால் மணி வீட்டுக்கு போய்கிட்டு இருக்கேன். இந்த மூணு பேருமே நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்து என்னோட நெருங்கிய நண்பர்கள். எங்க வீட்டுல கொஞ்சம் வசதி இருந்ததல (பலசரக்கு கடை) என்னை மேல படிக்க அனுப்புறாங்க. இல்லாட்டி நானும் இவங்கள மாதிரி 4 கிலோமீட்டர் சைக்கிள்ல போயி பைக் மெக்கானிக்கவும், நர்சிங் ஹோம்ல அட்டண்டராகவும் இருந்திருப்பேன்.
அந்த சந்துல தான் மணி வீடு. சீக்கிரம் கூட்டிட்டு போகணும், இல்லாட்டி அவுங்க அம்மா காபி குடுத்து வீட்டு கதை எல்லாம் கேட்டு லேட் ஆகிடும். மணியும் இதெல்லாம் நெனைச்சுதான் வழியிலேயே நிக்கிரானோ, சைக்கிள்-ஐ அவன்கிட்ட நிறுத்தினேன்.
அப்பா ஜிம்மி ஓடுதுப்பா புடிச்சுகுடுப்பா,

என்ன இங்கே நிக்கிற. இல்ல வீட்டுக்கு வந்தா எப்படியும் லேட் ஆகிடும்னுதான்...
இருவரும் கோயில்கிட்ட இருக்கிற வெப்ப மரத்தடியில சைக்கிள நிறுத்திட்டு உட்கார இடத்த தயார் செய்தோம். 6.15 மணி ஆச்சு இன்னும் ரெண்டு பேரையும் காணோமே என பேசிக் கொண்டு இருக்கும் பொது அவனுங்க ஒரு சைக்கிள்ல வந்துட்டாங்க. உனக்கு மசால்வட வாங்கிட்டு வர்றதுக்குத்தான் லேட் ஆயிடுச்சு என்றான் துரை. பஸ் ஸ்டாப் டீக்கடை மசால்வடைக்கு நான் அடிமைன்றது ஊருக்கே தெரிஞ்ச ரகசியம். கொத்துமல்லி நறுக்கிப்போட்டு, மொறுமொறுப்பா....
குமார் காலைல 5.30 பஸ் தானேடா நான் காலைல பஸ் ஸ்டாப் வரைக்கும் வரட்டுமா, இல்ல கதிர் அப்பா என்கூட புதுக் கோட்டை வரைக்கும் வறாரு, அதுனாலே வேணாம்.
கதிர் அடுத்த வாரம் உனக்கு பிறந்தநாள் வருதாமே என்ன பிளான், எங்களுக்கு எப்ப ட்ரீட் என்றான் மணி. டாக்டர் 1500/- அட்வான்ஸ் வாங்கிட்டு நாளைக்கு லீவு சொல்லிட்டு வந்திருக்கேன். புதுக்கோட்டை மகாராஜால டிரஸ் எடுக்கணும் அப்புறம் என் மாமா பொண்ணு செல்விக்கு ஒரு கிப்ட், மத்தபடி ஒரு பிளானும் இல்ல. நீங்க ரெண்டுபேரும் கூட வரிங்களா என்றான். அசைன்மென்ட் submission இருப்பதால் நான் வரமாட்டேன்னு அவனுக்கு தெரியும். பின்னர் மூணு பேரும் துரையின் அண்ணன் பைக்கல போறதா முடிவுஆச்சு. பஸ்ல போங்கடா 45 நிமிஷம் பைக்ல போறது safe இல்ல. அடப்போடா எத்தனை தடவ, இதெல்லாம் சகஜம் என்றான் கதிர்.
மணி நீ மெக்கானிக் செட் ஆரம்பிக்க இருக்குறதா சொன்னியே என்ன ஆச்சு. முடிஞ்சுரும் குமார், அப்பா 60000/- ஏற்பாடு பண்ணிடுவாரு, பிரதமர் யோஜ்னால ஒரு 50000/- sanction செஞ்சு தருவதா KVB மேனேஜர் சொல்லிருக்காரு. இன்னும் ஒன்ற மாசம்தான் வேலை, அப்புறம் மணி மெக்கானிக் செட் owner... All the best என்றோம் கோரசாக.நம்ம ஊர்லயே ஆரம்பிக்க்கலாம்ல, அங்க தெரிஞ்ச customers இருக்காங்க. உடனேயே பிக்கப் பன்னிடலாம், ஆறுமாசம் இல்ல ஒரு வருஷம் கழிச்சு நம்ம ஊருல பிரான்ச் போட்டு துரையவும் முதலாளியாக்கிடனும்னு பிளான் வச்சிருக்கேன்.
இருவரும் கோயில்கிட்ட இருக்கிற வெப்ப மரத்தடியில சைக்கிள நிறுத்திட்டு உட்கார இடத்த தயார் செய்தோம். 6.15 மணி ஆச்சு இன்னும் ரெண்டு பேரையும்
குமார் காலைல 5.30 பஸ் தானேடா நான் காலைல பஸ் ஸ்டாப் வரைக்கும் வரட்டுமா, இல்ல கதிர் அப்பா என்கூட புதுக்
கதிர் அடுத்த வாரம் உனக்கு பிறந்தநாள் வருதாமே என்ன பிளான், எங்களுக்கு எப்ப ட்ரீட் என்றான் மணி. டாக்டர் 1500/- அட்வான்ஸ் வாங்கிட்டு நாளைக்கு லீவு சொல்லிட்டு வந்திருக்கேன். புதுக்கோட்டை மகாராஜால டிரஸ் எடுக்கணும் அப்புறம் என் மாமா பொண்ணு செல்விக்கு ஒரு கிப்ட், மத்தபடி ஒரு பிளானும் இல்ல. நீங்க ரெண்டுபேரும் கூட வரிங்களா என்றான். அசைன்மென்ட் submission இருப்பதால் நான் வரமாட்டேன்னு அவனுக்கு தெரியும். பின்னர் மூணு பேரும் துரையின் அண்ணன் பைக்கல போறதா முடிவுஆச்சு. பஸ்ல போங்கடா 45 நிமிஷம் பைக்ல போறது safe இல்ல. அடப்போடா எத்தனை தடவ, இதெல்லாம் சகஜம் என்றான் கதிர்.
மணி நீ மெக்கானிக் செட் ஆரம்பிக்க இருக்குறதா சொன்னியே என்ன ஆச்சு. முடிஞ்சுரும் குமார், அப்பா 60000/- ஏற்பாடு பண்ணிடுவாரு, பிரதமர் யோஜ்னால ஒரு 50000/- sanction செஞ்சு தருவதா KVB மேனேஜர் சொல்லிருக்காரு. இன்னும் ஒன்ற மாசம்தான் வேலை, அப்புறம் மணி மெக்கானிக் செட் owner... All the best என்றோம் கோரசாக.நம்ம ஊர்லயே ஆரம்பிக்க்கலாம்ல, அங்க தெரிஞ்ச customers இருக்காங்க. உடனேயே பிக்கப் பன்னிடலாம், ஆறுமாசம் இல்ல ஒரு வருஷம் கழிச்சு நம்ம ஊருல பிரான்ச் போட்டு துரையவும் முதலாளியாக்கிடனும்னு பிளான் வச்சிருக்கேன்.
கதிர் உன் மாமா பிசினஸ் எப்படி போகுது. கல்யாணம் ஆச்சுன்னா நீயும் உன் மாமாகூட செட்டில் ஆயிடுவியா?. எங்கடா குமார் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன். contract பிசினஸ என்ன பாக்க சொல்றாரு, அதுனால இப்போ அந்த வேலைய கத்துகிட்டு இருக்கேன்.
முன்னை விட இந்த முறை அவர்களின் முயற்சியில் முன்னேற்றம் தெரிந்தது. மிகவும் உற்சாகமா இருக்கு.
அப்புறம் IPL, கோயில் திருவிழா, விண்ணை தாண்டி வருவாயா, தமிழ்ப்படம், நித்யானந்தா.., சன் டிவி- ன்னு நெறைய கதை ஓடிகிட்டு இருந்துது. அப்போ கதிர் செல்போன் 'கண்கள் இரண்டால்....' என்று பாடிகிட்டே முழிச்சு பாத்துச்சு. சாரிடா 9 .30 ஆச்சு புறப்படலாம்னு எல்லோரும் புறப்பட்டோம்.

திங்கள் காலேஜ் வந்து கிளாஸ், அசைன்மென்ட் submission, correction, exam time table, record என்று நேரம், நாள் போனதே தெரியவில்லை.
இன்று செவ்வாய்கிழமை. 6.00pm ஒரு டீ சாப்பிடனும்னு தோனுச்சு. football மைதானம்கிட்ட இருக்க டீக்கடைல டீக்கடைக்கு நடக்க ஆரம்பித்தேன்.
'கண்கள் இரண்டால்....' பாடல் டீக்கடையிலிருந்து அந்த ஏரியாவை தாலட்டிக்கிட்டு இருந்துச்சு. பாடல் கதிரை ஞாபகப்படுத்துச்சு. என்னை பார்த்ததும், டீயா வடை பஜ்ஜி வேணுமா?
டீக்கடைக்காரர் பையன் (4 வயசு அல்லது 5 ) ஒரு நாய்குட்டிய வச்சு விளையாடிகிட்டு இருந்தான். அவனை சிறிது நேரம் பாத்துகிட்டு இருந்தேன். தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் பால் காயிது...
பாடல் முடிஞ்சு விளம்பரம்...
காலைல வந்த பேப்பர் கந்தல் துணியா என் பக்கத்துல. கையில் கிடச்ச ஒரு பேப்பரை எடுத்து சுவாரஸ்யமே இல்லாம படிக்க ஆரம்பித்தேன்.துணிக்கடை திறப்புவிழா, நடிகை...M L A... பிரம்மாண்டமான.. அப்புறம் வீடு புகுந்து கொள்ளை.. அப்புறம் லாரி மோதி இளைஞர்கள் 3 பேர்... புதுப்பட்டி... துரை.. வயது... கதிர்...வயது...மணி ... புதுக்கோட்டை அருகே வேகமாக வந்த... சம்பவ இடத்திலேயே....இன்று செவ்வாய்கிழமை. 6.00pm ஒரு டீ சாப்பிடனும்னு தோனுச்சு. football மைதானம்கிட்ட இருக்க டீக்கடைல டீக்கடைக்கு நடக்க ஆரம்பித்தேன்.
'கண்கள் இரண்டால்....' பாடல் டீக்கடையிலிருந்து அந்த ஏரியாவை தாலட்டிக்கிட்டு இருந்துச்சு. பாடல் கதிரை ஞாபகப்படுத்துச்சு. என்னை பார்த்ததும், டீயா வடை பஜ்ஜி வேணுமா?
டீக்கடைக்காரர் பையன் (4 வயசு அல்லது 5 ) ஒரு நாய்குட்டிய வச்சு விளையாடிகிட்டு இருந்தான். அவனை சிறிது நேரம் பாத்துகிட்டு இருந்தேன். தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் பால் காயிது...
பாடல் முடிஞ்சு விளம்பரம்...
அப்பா ஜிம்மி ஓடுதுப்பா புடிச்சுகுடுப்பா,
தம்பி டீ எடுத்துக்க,
அழுகாதடா, இந்தா வர்றேன்
கதிர் அடுத்த வாரம் உனக்கு பிறந்தநாள்
மணி மெக்கானிக் செட் owner...
ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம்....
தலைக்குள் இரைச்சல் தாங்கமுடியலை
ரேடியோவில் கனாக்காணும் காலங்கள்... கலைந்தோடும் மேகங்கள்...