Friday, May 20, 2011

யானைக் கதை – கி.வா.ஜகந்நாதன்


பிசிர் என்பது ஒரு சிறிய ஊர். ஆந்தையார் சிறந்த புலவர். அவர் பிறந்தமையால் அவ்வூருக்கே ஒரு தனிச் சிறப்பு உண்டாயிற்று. ஆந்தையார் பெயரோடு பிசிரின் பெயரும் ஒட்டிக்கொண்டது. பிசிராந்தையாரென்றே இன்றும் அப் புலவரை வழங்குகின்றோம்.
புலவர் பெருமான் புதிய பாண்டிய மன்னனைக் கண்டுவரலாமென்று புறப்பட்டார். இராசதானி நகருக்கு வந்தார். அவருடைய நண்பர்கள் அவரை எதிர்கொண்டழைத்துப் பாராட்டினார்கள். பாண்டிய மன்னனாகிய அறிவுடை நம்பியின் குணங்கள் எத்தகையனவென உசாவி அறிந்துகொண்டார்.
“அவன் நல்லவன்தான் அவனுடைய மந்திரிகளே பொல்லாதவர்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு பாண்டியன் அரசியலை நடத்துகிறான்” என்றார் சிலர்.
“அரண்மனையில் நேர்ந்த செலவை ஈடுகட்டுவதற்காக அதிக வரி விதிக்க வேண்டும் என்று யோசனை நடக்கிறதாம். குடிமக்கள் இதை அறிந்து மிக்க வருத்தத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சிலர் கூறினர்.
‘அதிக வரியைத் தாங்கும் சக்தி எமக்கு இல்லை’ என்பதைத் தெரிவிக்க வழியில்லாமல் குடிகள் தவித்துக்கொண்டிருந்தார்கள். ‘வரி கொடா இயக்கம்’
அந்தக் காலத்திற்குத் தெரியாத சமாசாரம். நல்ல வேளையாகத் தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற பேரறிவாளராகிய பிசிராந்தையார் வந்து சேர்ந்தார். அவரிடம் தங்கள் குறைகளைக் கூறி முறையிட்டார்கள். அறிவுடைய புலவர்கள் அரசர்களையும் வழிப்படுத்தும் ஆற்றலுடையவர்கள் என்பது தமிழ் நாட்டில் பிரசித்தமான விஷயம். தம்மிடம் வந்து குறை கூறியவர்களிடம்,”என் னால் இயன்றதைச் செய்கிறேன்” என்று ஆந்தையார் சொல்லிப் பாண்டியனைப் பார்க்கச் சென்றார்.
பாண்டியன் அப்பெரும் புலவரது புகழை நன்கு அறிந்திருந்தான். அவரை மிக்க மரியாதையோடு வர வேற்று உபசாரம் செய்தான். யோகக்ஷேமங்களை விசாரித்தான். பிசிராந்தையாரும் அறிவுடை நம்பியின் மனம் உவக்கும்படி பல விஷயங்களைக் கூறினார். அப்பால் வழியிலே கண்ட காட்சி ஒன்றைக் கூறுவார்போல ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். “அரசே! நான் கண்ட காட்சியை என்னவென்று கூறுவது! தளதளவென்று விளைந்து முற்றியிருந்த வயல். நெற்கதிர்கள் அறிவுடையோரைப் போலத் தலை பணிந்து நின்றன. நிலமகள் வஞ்சனையின்றித் தனது வளத்தைத் தானஞ் செய்ய அதனைச் சுமந்து நிற்பது போலத் தோற்றியது அவ்வயல். அதைக் காணும்போது என் கண்கள் குளிர்ந்தன.
“என்ன கொடுமை! அடுத்த கணத்தில் ஒரு களிறு அவ்வயலில் புகுந்தது. அங்குள்ள நெற்பயிரைச் சுருட்டி அலைத்து வாயில் செலுத்தியது. தன் காலினால் பயிரில் பெரும்பாகத்தைத் துகைத்து அழித்தது. அதன் வாயிலே சென்றதைக் காட்டிலும் காலினால் அழிக்கப்பட்ட பயிரே அதிகம். தானும் உண்ணாமல் உடையவனுக்கும் பயன்படாமல் அத்தனை பயிரையும் அந்தக் கொடிய யானை வீணாக்கி விட்டது.” “அப்பால்?” என்று அரசன் ஆர்வத்தோடு கேட்டான்.
“அப்பால் என்ன? போனது போனதுதான். அந்த யானைக்குத் தினந்தோறும் அந்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொடுத்து வந்தால் எவ்வளவோ மாதங்களுக்கு வரும். ஒருமா நிலத்திலே, குறைவாக இருந்தாற்கூட ஒருயானைக்கு எவ்வளவோ நாளைக்குக் கவளம் கொடுக்கும். இந்த மாதிரி, யானையே அழிக்கப் புகுந்தால் நூறு செய்யாய் இருந்தாலும் போதாது. என்ன செய்வது, அந்த யானைக்கு இந்தக் கணக்குத் தெரிகிறதா? யானை ஒரு விலங்கு. அறிவு இல்லாதது. அறிவுடையவர்கள்கூட அந்த யானையைப் போலச் சில சமயங்களில் நடந்துகொள்கிறார்கள்!” என்றார் புலவர். “யார்? என்னசெய்கிறார்கள்?” என்று அரசன் வினவினான்.
“அரசர்களில் சிலர் அந்த யானையைப் போல நடக்கிறார்கள். குடிகளிடம் முறையாக வரி வாங்கி ஆதரித்து வந்தால் அவர்களுக்கு ஊக்கம் உண்டாகும்; நிலத்தைப் பண்படுத்தி அதிகமாகப் பயன் தரும்படி செய்வார்கள். அதனால் அரசனுக்கும் வருமானம் அதிகப்படும். இப்படியின்றி அறியாமையினால் அதிக வரி விதித்து அவர்களைத் துன்புறுத்தினால் குடிமக்கள் என்ன செய்வார்கள்? அறிவுடை வேந்தன் வரி வாங்கும் நெறியறிந்து கொள்ளின். நாட்டு வளம்கோடி பங்கு அதிகமாகி விருத்தி பெறும். அறிவில்லாத அரசன் அரசாட்சி செய்யத் தொடங்கினால் அவனைச் சுற்றி முட்டாள்கள் கூடிவிடுகிறார்கள்.’ இது செய்யலாம், இது செய்யக்கூடாது’ என்று அவர்கள் ஆராயமாட்டார்கள். அரசன் கூறுவன எல்லாம் சரியென்று ஆமோதிப்பார்கள். ‘மதுரை நகருக்குக் காவிரி நதியைக் கொண்டுவர எண்ணுகிறேன்’ என்று அரசன் சொன்னால். ‘ஆஹா! அப்படியே செய்யலாம். மகாராஜா நினைத்தால் ஆகாதது என்ன!’ என்று தலை யசைப்பார்கள். ‘வரிசையறியாக் கல்லென் சுற்றமாகிய இத்தகையவர்கள் பேச்சைக் கேட்டு அரசன் நடப்பானானால் அவனுக்கு வேறு விரோதியே வேண்டாம். குடிமக்களிடம் இரக்கம் இல்லாமல் வரிவிதித்து லாபம் பெறலாம் என்று அவர்கள் சொல்வார்கள்; அரசனும் கேட்பான். அப்பால் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடும்” என்று கதையோடு கருத்தையும் பிணைத்து விரித்துப் புலவர் நிறுத்தினார்.
வரியைப் பற்றிய பேச்சை எடுத்தபோதே அரசனுக்குக் குடர் குழம்பியது. அவர் முற்றும் கூறிய போது புலவர் தன்னையே நினைந்து கூறினார் என்பதைத் தெளிவாக உணர்ந்தான். அவர் கூறிய கதையிலே ஈடுபட்ட அவன் மனம் வயலை அழிக்கும் யானையையே நினைந்துகொண்டிருந்தது. தன் செயலையும் அவ்யானையின் செயலையும் ஒப்பு நோக்கிப் பார்த்தான் புலவர் கூற்று உண்மையே என்பதை அறிந்தான். ” புலவார் பெருமானே! உங்கள் உபதேசம் மிகவும் உபயோகமாயிற்று. அது என் காது வெறுக்கும்படியாக இருந்தாலும், நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்தேன். நான் செய்ய இருந்த பெரும்பிழையினின்றும் நீங்கினேன்” என்று பாண்டியன்சொல்லிப் புலவரைப் பாராட்டினான்.
வரியை அதிகப் படுத்தும் யோசனை நின்றது. ஒரு புரட்சியும் இல்லாமல் மிகவும் சுலபமான வழியில் வரிவிதிப்பு நீக்கப் பட்டது. பிசிராந்தையார், அறிவுடை நம்பியாகிய யானையைத் தம் அறிவுக் கயிற்றால் கட்டிவிட்டார். அதனால் யானைக்கும் நன்மை; நாட்டுக்கும் நன்மையே உண்டாயிற்று.

Saturday, November 6, 2010

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

Tuesday, March 23, 2010

கனாக்காணும் காலங்கள்...

கல்லூரிக்கு போறதுக்கு முன்னாடி ஒரு எட்டு என் நண்பர்களை பாத்துட்டு வரலாம்னு டிரஸ் மாத்திக்கிட்டு என்னோட சைக்கிள்-ஐ எடுத்துக்கிட்டு கிளம்பினேன். 
 
என்னோட ஊரை பத்தி சொல்லணுமுன்னா, புதுக்கோட்டை பக்கத்துல புதுப்பட்டி ஒரு சின்ன அழகான கிராமம். அழகிய பாதி சிதைந்த சிவன் கோயில், இன்னும் பட்டா போடாத கண்மாய், பத்து பதினஞ்சு கான்கரிட் வீடு, 300 குடும்பங்கள், ஒரு சின்ன ஜெபக்கூடம், டாஸ்மாக், 3 டீக்கடை, 2 பலசரக்கு கடை, மரத்தடி பள்ளிக்கூடம் அதுக்கு 2 டீச்சர்.
இப்போ என்னை பத்தி , நான் குமார், பக்கத்துல உள்ள திருச்சி நேஷனல் காலேஜ்
ல 2 து வருஷம் Economics படிக்கிறேன். 

எங்க ஊரில என்னோட இன்னும் 3 பேரு அந்த காலேஜ் விடுதில தங்கி படிக்கிறோம். சனி ஞாயிறு லீவுக்கு ஊருக்கு வந்திருக்கேன், நாளைக்கு காலைல 5 மணி பஸ்ல கிளம்புனா காலேஜ் ஆரம்பிக்குற நேரத்துக்கு போய்டலாம்.
ஹ்ம்ம் என்ன சுகமான காத்து. இப்படி எதிர் காத்துல சைக்கிள்ல போற சுகத்துக்காக இங்கேயே இருந்திடனும் போல இருக்கும். என்ன செய்றது படிப்பு வேலை etc etc எல்லாம் நெனைச்சா....
மொதல்ல மணியை பாத்துட்டு, அவனையும் கூட்டிக்கிட்டு துரை, கதிர் 2 பேரயும் கோயில் அருகில் உள்ள மரத்தடியில் சந்திக்கனும்னு காலைலேயே பேசி இருந்ததால் மணி வீட்டுக்கு போய்கிட்டு இருக்கேன்.
இந்த மூணு பேருமே நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்து என்னோட நெருங்கிய நண்பர்கள். எங்க வீட்டுல கொஞ்சம் வசதி இருந்ததல (பலசரக்கு கடை) என்னை மேல படிக்க அனுப்புறாங்க. இல்லாட்டி நானும் இவங்கள மாதிரி 4 கிலோமீட்டர் சைக்கிள்ல போயி பைக் மெக்கானிக்கவும், நர்சிங் ஹோம்ல அட்டண்டராகவும் இருந்திருப்பேன்.
அந்த சந்துல தான் மணி வீடு. சீக்கிரம் கூட்டிட்டு போகணும், இல்லாட்டி அவுங்க அம்மா காபி குடுத்து வீட்டு கதை எல்லாம் கேட்டு லேட் ஆகிடும். மணியும் இதெல்லாம் நெனைச்சுதான் வழியிலேயே நிக்கிரானோ,
சைக்கிள்-ஐ அவன்கிட்ட நிறுத்தினேன்.

என்ன இங்கே நிக்கிற. இல்ல வீட்டுக்கு வந்தா எப்படியும் லேட் ஆகிடும்னுதான்...
இருவரும் கோயில்
கிட்ட இருக்கிற வெப்ப மரத்தடியில சைக்கிள நிறுத்திட்டு உட்கார இடத்த தயார் செய்தோம். 6.15 மணி ஆச்சு இன்னும் ரெண்டு பேரையும் காணோமே என பேசிக் கொண்டு இருக்கும் பொது அவனுங்க ஒரு சைக்கிள்ல வந்துட்டாங்க. உனக்கு மசால்வட வாங்கிட்டு வர்றதுக்குத்தான் லேட் ஆயிடுச்சு என்றான் துரை. பஸ் ஸ்டாப் டீக்கடை மசால்வடைக்கு நான் அடிமைன்றது ஊருக்கே தெரிஞ்ச ரகசியம். கொத்துமல்லி நறுக்கிப்போட்டு, மொறுமொறுப்பா.... 

குமார் காலைல 5.30 பஸ் தானேடா நான் காலைல பஸ் ஸ்டாப் வரைக்கும் வரட்டுமா, இல்ல கதிர் அப்பா என்கூட புதுக்கோட்டை வரைக்கும் வறாரு, அதுனாலே வேணாம்.
கதிர் அடுத்த வாரம் உனக்கு பிறந்தநாள் வருதாமே என்ன பிளான், எங்களுக்கு எப்ப ட்ரீட் என்றான் மணி. டாக்டர் 1500/- அட்வான்ஸ் வாங்கிட்டு நாளைக்கு லீவு சொல்லிட்டு வந்திருக்கேன். புதுக்கோட்டை மகாராஜால டிரஸ் எடுக்கணும் அப்புறம் என் மாமா பொண்ணு செல்விக்கு ஒரு கிப்ட், மத்தபடி ஒரு பிளானும் இல்ல. நீங்க ரெண்டுபேரும் கூட வரிங்களா என்றான். அசைன்மென்ட் submission இருப்பதால் நான் வரமாட்டேன்னு அவனுக்கு தெரியும். பின்னர் மூணு பேரும் துரையின் அண்ணன் பைக்கல போறதா முடிவுஆச்சு. பஸ்ல போங்கடா 45 நிமிஷம் பைக்ல போறது safe இல்ல. அடப்போடா எத்தனை தடவ, இதெல்லாம் சகஜம் என்றான் கதிர்.
மணி நீ மெக்கானிக் செட் ஆரம்பிக்க இருக்குறதா சொன்னியே என்ன ஆச்சு. முடிஞ்சுரும் குமார், அப்பா 60000/- ஏற்பாடு பண்ணிடுவாரு, பிரதமர் யோஜ்னால ஒரு 50000/- sanction செஞ்சு தருவதா KVB மேனேஜர் சொல்லிருக்காரு. இன்னும் ஒன்ற மாசம்தான் வேலை, அப்புறம் மணி மெக்கானிக் செட் owner... All the best என்றோம் கோரசாக.நம்ம ஊர்லயே ஆரம்பிக்க்கலாம்ல, அங்க தெரிஞ்ச customers இருக்காங்க. உடனேயே பிக்கப் பன்னிடலாம், ஆறுமாசம் இல்ல ஒரு வருஷம் கழிச்சு நம்ம ஊருல பிரான்ச் போட்டு துரையவும் முதலாளியாக்கிடனும்னு பிளான் வச்சிருக்கேன்.
கதிர் உன் மாமா பிசினஸ் எப்படி போகுது. கல்யாணம் ஆச்சுன்னா நீயும் உன் மாமாகூட செட்டில் ஆயிடுவியா?. எங்கடா குமார் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன். contract பிசினஸ என்ன பாக்க சொல்றாரு, அதுனால இப்போ அந்த வேலைய கத்துகிட்டு இருக்கேன்.
முன்னை விட இந்த முறை அவர்களின் முயற்சியில் முன்னேற்றம் தெரிந்தது. மிகவும் உற்சாகமா இருக்கு.

அப்புறம் IPL, கோயில் திருவிழா, விண்ணை தாண்டி வருவாயா, தமிழ்ப்படம், நித்யானந்தா.., சன் டிவி- ன்னு நெறைய கதை ஓடிகிட்டு இருந்துது. அப்போ கதிர் செல்போன் 'கண்கள் இரண்டால்....' என்று பாடிகிட்டே முழிச்சு பாத்துச்சு. சாரிடா 9 .30 ஆச்சு புறப்படலாம்னு எல்லோரும் புறப்பட்டோம்.
திங்கள் காலேஜ் வந்து கிளாஸ், அசைன்மென்ட் submission, correction, exam time table, record என்று நேரம், நாள் போனதே தெரியவில்லை.
இன்று செவ்வாய்கிழமை. 6.00pm ஒரு டீ சாப்பிடனும்னு தோனுச்சு. football மைதானம்கிட்ட இருக்க டீக்கடைல டீக்கடைக்கு நடக்க ஆரம்பித்தேன்.
'கண்கள் இரண்டால்....' பாடல் டீக்கடையிலிருந்து அந்த ஏரியாவை தாலட்டிக்கிட்டு இருந்துச்சு. பாடல் கதிரை ஞாபகப்டுத்துச்சு. என்னை பார்த்ததும், டீயா வடை பஜ்ஜி வேணுமா?
டீக்கடைக்காரர் பையன் (4 வயசு அல்லது 5 ) ஒரு நாய்குட்டிய வச்சு விளையாடிகிட்டு இருந்தான். அவனை சிறிது நேரம் பாத்துகிட்டு இருந்தேன். தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் பால் காயிது...
பாடல் முடிஞ்சு விளம்பரம்...
காலைல வந்த பேப்பர் கந்தல் துணியா என் பக்கத்துல. கையில் கிடச்ச ஒரு பேப்பரை எடுத்து சுவாரஸ்யமே இல்லாம படிக்க ஆரம்பித்தேன்.துணிக்கடை திறப்புவிழா, நடிகை...M L A... பிரம்மாண்டமான.. அப்புறம் வீடு புகுந்து கொள்ளை.. அப்புறம் லாரி மோதி இளைஞர்கள் 3 பேர்... புதுப்பட்டி... துரை.. வயது... கதிர்...வயது...மணி ... புதுக்கோட்டை அருகே வேகமாக வந்த... சம்பவ இடத்திலேயே....

அப்பா ஜிம்மி ஓடுதுப்பா புடிச்சுகுடுப்பா,

தம்பி டீ எடுத்துக்க,

அழுகாதடா, இந்தா வர்றேன்

கதிர் அடுத்த வாரம் உனக்கு பிறந்தநாள்
மணி மெக்கானிக் செட் owner...
ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம்....


தலைக்குள் இரைச்சல்
தாங்கமுடியலை

ரேடியோவில் கனாக்காணும் காலங்கள்... கலைந்தோடும் மேகங்கள்...

Monday, March 8, 2010

சமீபத்தில் ரசித்தது:

Saturday, September 26, 2009

Wednesday, August 26, 2009